அரசியல் கைதிகள் விடுதலை குறித்து உறுதியளித்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி
இலங்கையில் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் வாக்குறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் சமகால நிலைவரம், புதிய அரசின் செயற்பாடுகள், நாட்டைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு அரசு கொண்டிருக்கும் இயலுமை உள்ளிட்ட விடயங்கள் பற்றி வதிவிடப் பிரதிநிதி, கஜேந்திரகுமாரிடம் கேட்டறிந்தார்.
பொருளாதாரச் சுமை
அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், இந்தப் புதிய அரசின் ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடிகள் குறையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
"இருப்பினும் தற்போது இந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெற்றிருக்கும் நிலையில், ஏற்கனவே நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்காமல் தொடர்வதையோ அல்லது பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ நியாயப்படுத்த முடியாது.
எனவே, அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்குள் இந்த இரண்டு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு இருக்கின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை
அதேபோன்று இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஓர் உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஓர் உறுப்பினரும் எனத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 10 உறுப்பினர்களும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அதனை முன்னிறுத்தி அவரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நகர்வுகள் பற்றியும் மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கு விளக்கமளித்தார்.
மேலும் நீண்ட காலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேர் தொடர்பில் பேசப்பட்டபோது, அவர்களது விடுதலை குறித்து தானும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ், கஜேந்திரகுமார் எம்.பியிடம் வாக்குறுதியளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
