ஐ.நா.மனித உரிமை சபை: இலங்கைக்கு அதிஷ்டமற்ற ஏழு!

Gotabaya Rajapaksa United Kingdom Rajapaksa Family OHCHR
By DiasA Oct 17, 2022 03:53 PM GMT
Report
Courtesy: கட்டுரை ச.வி.கிருபாகரன்

ஆபிரகாம் லிங்கன் கூறினார் நீங்கள் சிலரை சில நேரமும், சிலரை எல்லா நேரத்திலும் மகிழ்விக்கலாம். ஆனால் எல்லாரையும் எல்லா நேரமும் மகிழ்விக்க முடியாது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 51வது கூட்ட தொடரில், அக்டோபர் 6ஆம் திகதி வியாழன் அன்று இலங்கை தொடர்பான கோர் குறூப் எனப்படும் செயற்பாட்டு குழு இலங்கை மீதான தீர்மானத்தை சமர்ப்பித்த போது இதே நிலைப்பாட்டை சர்வதேசம் கொண்டிருந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்தன முதல், இலங்கையில் சிங்கள பௌத்தர் அல்லாத ஒருவரை வெளிவிவகார அமைச்சராக அல்லது தமது பரப்புரையாளர்களாகப் பயன்படுத்தி தமது மீதான சர்வதேச அழுத்தங்களைக் கையாளும் நடைமுறை உள்ளது.

இருப்பினும், ஐ.நா.வின் 51 அமர்வில் இந்த யோசனை மிக தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஏ.சி.எஸ். ஹமீட், லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்கள் கடுமையாக உழைத்தனர்.

ஹமீட் வெளிவிவகார அமைச்சராக இருந்த பொழுது, கடந்த 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி, ஐ.நா பொதுச் சபையில் இலங்கை சார்பாகப் உரையாற்ற ஹமீட் அழைக்கப்பட்ட வேளையில் பிரித்தானியாவை சார்ந்த தமிழ் வழக்கறிஞர் மறைந்த வைகுண்டவாசன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் போல் தன்னை காண்பித்து, இரண்டு நிமிடம், இலங்கையின் தமிழர்களின் அரசியல் குறைகளை பற்றி ஐ.நா. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மேடையில் இருந்து வெளியேற்றும் வரை உரையாற்றினார் என்பது சரித்திரம்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு இலங்கை  சார்பாக கடுமையான பரப்புரை செய்வதில் மறைந்த லக்ஷ்மன் கதிர்கர்மர் பெரும் பங்களிப்பை வழங்கினார்.

ஆனால் அவரை பிரதமராக நியமிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பொழுது, பௌத்த பிக்குகள் முதல் பல தென்னிலங்கை அரசியல்வாதிகள், குறிப்பாக மகிந்த ராஜபக்ச வரை அவரது பிரதமராவதற்கான நியமனத்தை முற்று முழுமையாக எதிர்த்தார்கள் என்பதும் சரித்திரம்.

அவர் மறைந்த பின்னர், மகிந்த ராஜபக்ச உட்பட கதிர்காமரின் நினைவாக ஒரு நிறுவனத்தை தமது சுயநல நோக்கம் கொண்டு ஸ்தாபித்தனர்.

கடந்த காலங்களில், மகிந்த ராஜபக்ச ரவூப் ஹக்கீமை இஸ்லாமிய நாடுகளில் தனது பரப்புரையாளர்களாகப் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு.

இப்போது இலங்கையின் பலிகடாவகா அலி சப்ரி விளங்குகிறார். சில முக்கியமான பயங்கரவாத சட்டத்திற்கு கீழான வழக்குகளுக்கு அவர் வழக்கறிஞராக விளங்கியுள்ளார்.

கோட்டாபய அரசாங்கம்

ஐ.நா.மனித உரிமை சபை: இலங்கைக்கு அதிஷ்டமற்ற ஏழு! | Un Human Rights Council Unlucky Seven Sri Lanka

எவ்வாறாயினும், இவர் கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட வழக்கறிஞராக கடமையாற்றிய காரணத்தினால், இவர் கோட்டாபயவினால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார்.

கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையில், இலங்கையின் எதிரான தீர்மானத்தின் பலிகடவாக அலி சப்ரி விளங்குகிறார்.

கோர் குறூப் எனப்படும் செயற்பாட்டு குழு  ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா , ஜேர்மனி,மொன்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குழுவினால் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

இந்த தீர்மானத்திற்கு கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

ஐ.நா மனித உரிமை மன்றங்களில் பங்கேற்று வரும் எனது முப்பத்திரண்டு வருட அனுபவத்தில், ஏழு நாடுகளால் ஓர் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு, நாற்பது நாடுகள் அதற்கு இணை அனுசரணை வழங்ககுவதானால் குறிப்பிட்ட தீர்மானம் நிச்சயம் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

இதை இலங்கை இராஜதந்திரிகள் உணரவில்லையானால், இது யாருடைய குறை எவ்வாறாயினும், அக்டோபர் 6ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் சபையில் நடந்த சம்பவம் இலங்கைக்கு உண்மையிலேயே சோகமான தினமாகும்.

ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதி சாமர்த்தியமாக தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

வாக்கெடுப்பிற் முன் உறுப்பு நாடுகள் விளக்கமளிக்க அழைக்கப்பட்டபோது, பிரான்ஸ் மற்றும் (தென்) கொரிய குடியரசு இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான், சீனா, வெனிசுலா ஆகிய நாடுகள் தாம் எதிராக வாக்களிப்பதாக தெரிவித்தன.

பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகள் தாம் நடுநிலைமை வகிக்கவுள்ளதாக சபையில் தெரிவித்தனர்.

இங்கு இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தனது உரையில் பின்வருமாறு கூறினார். இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் கண்டறிவதில் இந்தியா எப்பொழுதும் கொள்கையாக கொண்டுள்ளது.

இலங்கையின் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சமாதானம் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கான அடிப்படையில் கண்ணியம் அமைதி என்ற அடிப்படையில், இலங்கையின் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நனவாக்குமாறு இலங்கையை வேண்டுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல், ஐ.நா மனித உரிமைப் சபையில் இலங்கை தொடர்பான ஒன்பது தீர்மானங்களில் இந்தியா மூன்று தடவை ஆதரவாகவும், மூன்று முறை நடுநிலையாகவும் வாக்களித்துள்ளது. மற்றைய மூன்று தடவையும் வாக்கெடுப்பின்றி தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

2012ஆம் ஆண்டிலிருந்த உரை

இவற்றை தொடர்ந்து இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வாக்கெடுப்புக்கு முன் உரையாற்ற அழைக்கப்பட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் ஒரே ஒரு உரையை வைத்து கொண்டு திகதி, கூட்ட தொடரின் இலக்கங்களை மாற்றி பாவிக்கிறார்களா என்பது சந்தேகம் உருவாகிறது.

அதாவது, முதல் தடவையாக இலங்கை மீது ஓர் கனதியான தீர்மானத்தை அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரும்பொழுதெல்லாம் அது அலி சப்ரியாக இருந்தலென்ன, தினேஷ் குணவர்தனவாக இருந்தலென்ன, மங்கள சமரவீரவாக இருந்தலென்ன, மகிந்த சமரசிங்கவாக இருந்தலென்ன, ஒரே உள்ளடக்கத்தையே வாசிப்பார்கள்.

புதிதாக எதையும் கூறவோ, நியாயப்படுத்தவோ அவர்களிடம் எதுவும் இல்லை என்பதை இங்கு நிருபணமாகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் கடந்த 1948 ஆம் ஆண்டு முதல், இவற்றையே செய்து முழு உலகத்தையும் முட்டாளாக்குகிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அலி சப்ரி கூறிய அம்சங்களில் ஒன்று இந்த தீர்மானத்திற்கான நிதி பற்றியது, என்னை மிக ஆச்சரியத்தில் ஆற்றியது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “தொண்டு சிக்னாம் என்பவை தங்களது வீட்டிலியே ஆரம்பமாக வேண்டுமென”. இதை அலி சப்ரி உணரவில்லையென நம்புகிறேன்.

இந்தத் தீர்மானம் எந்த தடையின்றி நிறைவேற்றப்படும் என்று இலங்கை நன்றாகத் தெரிந்தும் எதற்காக கொழும்பிலிருந்து ஓர் பாரிய அணியை அலி சப்ரி ஜெனிவாவுக்குக் கொண்டு வந்தார்.

ஜெனிவாவில் ஐ.நா. கட்டிடத்திற்கு முன்பாக, அக்டோபர் 3ஆம் திகதி திங்கட்கிழமை முதல், இலங்கை தூதுவரலாயத்தின் ஐந்து வாகனங்கள் நிறுத்துவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அப்படியானால், ஜெனிவாவில் அலி சப்ரியும் அவர்களது குழுவினரும் ஐந்து வாகனத்தில் பயணம் செய்துள்ளார்கள்.

இதற்கு மேலாக விமானச் செலவு, தங்குமிடம் வசதி, உள்நாட்டில் பயண செலவு, பிற இராஜதந்திரிகளுடனானா சந்திப்பு அவர்களிற்கு விருந்தளித்தல் போன்றவற்றின் செலவுகளை யார் பணத்தில் நடைபெற்றது.

இந்த தீர்மானத்தின் நிதி பற்றி பேசிய அலி சப்ரி, இலங்கையின் மிக மோசமான நிதி நிலைமை பற்றி நன்றாக தெரிந்திருந்தும், இவர் நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க தவறியுள்ளார் என்பதே உண்மை.

மேற்கத்தேய சார்பு

ஐ.நா.மனித உரிமை சபை: இலங்கைக்கு அதிஷ்டமற்ற ஏழு! | Un Human Rights Council Unlucky Seven Sri Lanka

இலங்கைக்கான சில தோழமை நாடுகளின் உரைகளை கேட்டு நான் ரசிப்பதுண்டு. காரணம் அவர்களும், இலங்கையின் அறிக்கை போன்று, தமது அறிக்கைக்கு திகதியையும் கூட்ட தொடர்பின் இலக்கத்தையும் மாற்றி ஒரே உரையை தசாப்தங்களாக அர்தமின்ற ஆற்றுகிறார்கள் என்பதே உண்மை.

பொலிவியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், உசெபெக்ஸ்தான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளின் இலங்கைக்கான ஆதரவு உரை மிக வேடிக்கையானது.

அவர்கள் கூறுவது என்னவெனில், “தெரிவுநிலை, பாரபட்சம், மேற்கத்திய சார்பு, இரட்டை நிலைப்பாடு, இறையாண்மை கொண்ட அரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல் போன்றவை பற்றி அவர்கள் மிக மோசமாக உரையாற்றுகிறார்கள்.

மேலும், இலங்கை அனைத்து ஐ.நா பொறிமுறைக்கும் ஒத்துழைக்கும் போது ஏன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வினாவுவது இவர்களின் அறியாமையை காட்டுகிறது.

ஏரித்திரிய நாட்டின் நிலையை, நாம் மிக நீண்ட காலமாக அவர்களுடன் மிக நெருங்கி பழகிய காரணத்தில், அவர்களது நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடிகின்றது.

இவர்கள் கூறும் மேற்கு நாடுகளின் சார்பு தீர்மானம் என்பது முழு பொய். காரணம் மேற்கு நாடுகளிற்குள் ஏழு நாடுகள் மட்டுமே வாக்களித்ததுள்ளனர்.

அப்படியானால் மிகுதி பதின்மூன்று நாடுகளின் ஆதரவு என்பது மேற்கு நாடுகள் அல்ல என்பதை யாவரும் உணர வேண்டும்.

இலங்கை சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் பொறிமுறைகளை மதிக்காததால் ஒரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வாக்கெடுப்பின்றி ஒருமித்த தீர்மானங்களை இருந்தபோதும், இலங்கை இணை அனுசரணை வழங்கிய விடயங்களை ஒருபோதும் செயல்படுத்தவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில், மேல் குறிப்பிட்ட நாடுகள் தவிர வேறு எந்த நாடுகளும் இலங்கையை ஆதரிக்காது.

பல தடவைகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா மனித உரிமைகள் சபையில், இலங்கைக்காக ஐ.நா.மனித உரிமை சபையை குற்றம்சாட்டி பல உரைகள் ஆற்றியதுண்டு.

கடந்த வாரம் இவர் ஓர் செவ்வியில், “கடந்த சந்தர்ப்பங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியதால், ஐக்கிய நாடு மனித உரிமைகள் சபையில், இலங்கை தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” என்று கூறினார்.

பீரிஸ் இந்த உண்மையை உணர்ந்து கொள்வதற்கு இவ்வளவு காலம் சென்றது வருத்தத்திற்குரியது. அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக இதை அவர் ஒரு துரும்பாக பாவித்து கூறியிருக்க மாட்டார் என நம்புகிறேன். இப்போது ஜி.எல்.பீரிஸ் வாய் திறந்துள்ளமை.

சர்வதேச சமமுதாயம் இலங்கையை இனியும் நம்பாதிருக்க வழி அமைத்துள்ளது.

ரணில்

ஐ.நா.மனித உரிமை சபை: இலங்கைக்கு அதிஷ்டமற்ற ஏழு! | Un Human Rights Council Unlucky Seven Sri Lanka

மேற்கு நாடுகளின் ஆதரவை கொண்டதாக கருதப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த வாரத் தீர்மானம் முகத்தில் அறைந்தது போன்றதாகும். மேலும், இஸ்லாமிய நாடுகளின் மூலம் வாக்களிப்பதை சமளிப்பதற்காக வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அலி சப்ரி.

ஆனால் இவர்களின் முழு தந்திரமும் மனித உரிமை சபையில் தோல்வியடைந்துள்ளது.

அண்மைக்காலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் சபை உட்பட, பல மேடைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்த முன்னாள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மற்றும் ஜெனிவாவிற்கான ஐ.நா. முன்னாள் இலங்கை பிரதிநிதி தயான் ஜயதிலக்க ஆகியோர் தற்பொழுது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகப் உரையாற்றுகின்றனர்.

இவை பாசாங்குத்தனமா அல்லது சந்தர்ப்பவாதம் என்று புரியவில்லை. இந்த மூவருக்கும் மீண்டும் அரசாங்க உயர் பதவிகள் வழங்கப்பட்டால், இவர்கள் இப்போது பேசுவதைத் தலைகீழாக மீண்டும் நியாயப்படுத்துவார்களா.

கடந்த வியாழன் 6 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பு இலங்கைக்கு உண்மையில், அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால தீர்மானங்களுடன் இவ் வாக்கெடுப்பை ஒத்து பார்க்கும்பொழுது, ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை வீழ்ச்சி அடைந்துவருவதை நாம் அவதானிக்க முடிகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை இலங்கை சர்வதேச சமூகத்தின் மத்தியில் எங்கே நிற்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

2009 2012 2013 2014 2015-2017-2019 2021 2022 22 15 13 12 (ஒருமித்த கருத்து - வாக்கு இல்லை) 11 07

இலங்கை அரசியல்வாதி போல் பேசுவதனால், இலங்கைக்கு எதிராக நாற்பது நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களித்ததாக கருத்தில் கொள்ளலாம்.

வாக்கெடுப்பின் முடிவின் பிரகாரம் ஆதரவாக 20 நாடுகளும், 20 நாடுகள் நடுநிலைமையாகவும், எதிராக 07 நாடுகளும், அதாவது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நடுநிலைமை வகித்த நாடுகள், இலங்கையை அவமானப்படுத் விரும்பாத காரணத்தினால் நடுநிலைமை வகித்தார்கள் என்பதே உண்மை.

தற்போது இலங்கையின் நண்பர் யார், யாருமே இல்லை என்பது தான் எனது பதில்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, ‘சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் மனித உரிமை நிலைமை’ என்ற தலைப்பில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவினால் ஓர் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் இரு வாக்குகளால் சீனாவால் தோற்கடிக்கப்பட்டது.

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றால் அதே கூட்ட தொடரில், அதே உறுப்பினர்கள், அதே நாளில், சீனா ஏன் இலங்கையிற்கு உதவ முன்வரவில்லை. இந்தியாவும் அதே நிலைபாடுதான்.

சீனாவுக்கு எதிரான தீர்மானம், மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திலும் இந்தியா நடுநிலை வகித்துள்ளது.

அப்படியானால், இந்தியா எங்கே நிற்கிறார்கள் என்பதுதான் பல ஆய்வாளர்களது வினாவாகவுள்ளது.

இலங்கை அரசியல்வாதிகளின் பாசாங்குத்தனத்தை சர்வதேச சமூகம் இனியும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை.

சர்வதேச சமூகம் இலங்கையின் பற்றி நன்றி உணர்ந்து, படிப்படியாக இறுக்க தொடங்கியுள்ளார்கள்.

சர்வதேசத்தை சிறிலங்கா எப்படிவாக ஏமாற்றி வருகிறது என்பதற்கு ஒரேயொரு நல்ல உதாரணத்தை இங்கு தருகிறேன்.

ஐ. நா. செயலாளர் நாயகம்

வன்னியில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டிய நேரத்தில், ஐ.நா மனித உரிமைகள் சபையில், விசேட அமர் ஒன்றை நடாத்துவதற்கு மேற்கு நாடுகள் ஓர் வேண்டுகோளை விடுத்திருந்தன.

ஆனால் இந்தியா, கியூபா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளால், விசமத்தனமாக தாமதப்படுத்தப்பட்டது.

இறுதியில் அந்த விசேட அமர்வு, கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 26, 27ஆம் திகதிகளில் போர் முடிவுற்ற பின்னரே நடைபெற்றது.

உண்மையில், இந்த விசேட அமர்வைப் பயன்படுத்தி, இலங்கை தனது தந்திரமான விளையாட்டு மூலம் இந்தியா, சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியோடு தங்களுக்கு சாதகமான ஓர் தீர்மானத்தை முன்னொழித்து ஐந்து வாக்கு வித்தியாசத்தால் வெற்றியும் பெற்றார்கள்.

ஆனால் இந்த தீர்மானத்தில் கூறிய வாக்குறுதிகளை இலங்கை இன்று பதின்மூன்று வருடங்காளகியும் நிறைவேற்றவில்லை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களைப் படிக்கவும்: 27 மே 2009 அன்று (L.1/Rev.2 - S 11/1)) தீர்மான வரைவை அறிமுகப்படுத்திய இலங்கையின் பிரதிநிதி தயான் ஜெயதிலகா பின்வருமாறு கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் இலங்கையின் ஜனாதிபதிக்கு இடையிலான கலந்துரையாடலின் முழுமையையாக தீர்மானத்தின் செயற்பாட்டு பத்தி 10யில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இணை அனுசரணையாளர்களின் அர்ப்பணிப்புக்கு இதற்கு மேல் இலங்கை நேர்மையாக இருக்க முடியாது.

30 வருடகால யுத்தம் முடிவடைந்து பத்து நாட்களுக்குப் பின்னர், இலங்கையின் சபையில் தனது உண்மை தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. "வரைவுத் தீர்மானம் (L.1/Rev.2 ) இலங்கை அரசாங்கத்திற்கு, ஓர் வெற்று காசோலை அல்ல.

இதில் பொதுச் செயலாளருடனான ஒப்பந்தத்தின் முழுமையையும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது தண்டனைக்குரிய நடவடிக்கையாகவும் இல்லை.

கடந்த 2009 மே 27 அன்று மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மாட்டின் இகோகணி ஓம்பிகி தனது இறுதிக் கருத்துரையில், தீர்மான வரைவு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டறிக்கையை அங்கீகரித்துள்ளது எனவும் கூறினார்.

ஆனால் இன்று பதின்மூன்று வருடங்களாகியும் அவ் தீர்மானத்தில் கூறிய எதுவும் நடைபெறவில்லை.

கடந்த 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கையில் யார் ஆட்சியில் இருந்தாலும், வாய்மொழி மற்றும் போலி வாக்குறுதிகள் மூலமே மக்களை நிர்வகிக்கின்றனர்.

அவர்கள் கையெழுத்திடும் ஒப்பந்தங்கள் கூட, எந்த அர்த்தமும் அற்றவை என்பது நிருபனமாகியுள்ளது. அதே பாணியில் இலங்கை சர்வதேச சமூகத்துடன் வேலை செய்ய முடியாது. "ஏமாற்றுதல் ஒரு பேரழிவில் முடிவடையும்" என்பதை நிரூபிக்க உலகளாவிய ரீதியில் பல ஆதாரங்கள் உள்ளன. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US