இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி கோரியுள்ள மனித உரிமைகள் பேரவை
இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ.1.1 பில்லியன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.
2025 அக்டோபர் முதல் 2027 செப்டெம்பர் வரையிலான காலத்துக்காக இந்த நிதி கோரப்படுள்ளது.
ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் இந்த திட்டம், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையாகும்.
2021இல் அமைக்கப்பட்ட இந்த திட்டம், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பொறிமுறையை அதன் தொடக்கத்திலிருந்தே இலங்கையின் அரசாங்கங்கள் நிராகரித்து வருகின்றன.
திட்டச் செலவுகள் பயணச் செலவுகள், புதிய ஆட்சேர்ப்புகள், பகுப்பாய்வுகள் போன்ற விடய செலவுளுக்காகவே இந்த நிதி தேவைப்படுகிறது. முன்னதாக, வரைவுத் தீர்மானத்தின் பரிசீலனையின் போது, இந்த திட்டம் எவ்வாறு அமைக்கப்பட்டது, அதன் பணிகள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆகியவற்றின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து இலங்கையின் தூதர் ஹிமாலி அருணதிலகா கேள்வி எழுப்பியிருந்தார்.
இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்
நான்கு ஆண்டுகள் கழித்தும், இலங்கை மக்களுக்கு இந்தத் திட்டத்தினால் எந்த நன்மைகளையும் இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த நிலையில், தமது களஞ்சியத்தில் இப்போது 530க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட 101,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன.
இதில் இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான 300க்கும் மேற்பட்ட சாட்சிகள் மற்றும் 230 அமைப்புகளின் பங்களிப்புகள் அடங்கும் என்று, இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் அறிவித்துள்ளது.
இந்த களஞ்சியத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி, கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் சாத்தியமான சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்பான நபர்களின் சுயவிவரங்களை உருவாக்கியுள்ளதாகவும், மனித உரிமைகள் பேரவையின் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
