ஜெனிவா கூட்டத்தொடர்! அரசாங்கத்திற்கு எதிராக காய் நகர்த்தும் சஜித்
ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டை காட்டி கொடுத்தது என குற்றம் சாட்டிய சரத் வீரசேகர, இனிமேலும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீதான தாக்குதல் இடம்பெற்றபோது, அங்கு வந்து தாக்குதலை நடத்தியவர்கள் வெள்ளைவானில் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.