ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையை ஏற்கவே முடியாது - அரசாங்கத்தின் பதில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை ஏற்க முடியாது. ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும் சமநிலையுடனும் அமைய வேண்டும் என ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பணிமனை தெரிவித்துள்ளது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வு நாளை ஆரம்பமாகின்றது.
இதில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பிலேயே ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பணிமனை மேற்கண்டவாறு கூறியுள்ளது.
இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பை
இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது "ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தத் தீர்மானத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பொறுப்புக்கூறல் திட்டத்தை நாம் தொடர்ந்து எதிர்க்கின்றோம். இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள் உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடனும் அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருகின்றது.
மோசமான மனித உரிமைகள் மீறலை
இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும் சமநிலையுடனும் அமைய வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் அந்த அறிக்கை விவரித்துள்ளது.
முன்னதாக, இராணுவம் மற்றும் படையினரின் மோசமான மனித உரிமைகள் மீறலை இலங்கை அரசு ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது.
இலங்கை ரோம் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



