கோவிட் தொற்றின் முடிவு காலம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் தகவல்
கோவிட் வைரஸ் முடிவுக்கு வருவதில் இருந்து வெகுதொலைவில் உள்ளது என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸின் புதிய உருமாறிய கோவிட் வைரஸ்கள் உருவாகி வருகின்றன.
இதுபற்றி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறியதாவது,
உலகமெங்கும் ஒவ்வொரு நாளும் 15 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆசியாவில் பெரிய வெடிப்பு பரவுகிறது.
ஐரோப்பா முழுவதும் புதிய அலை பரவி வருகிறது. சராசரியாக ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை, புதிய வகை கோவிட் பரவி வருகிறது.
எனவே, கோவிட் வைரஸ் முடிவுக்கு வருவதில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.
அரசாங்கங்களும், மருந்து கம்பெனிகளும் எல்லா இடத்திலும் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி சென்றடைய பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
