ஐ. நா பொதுச்செயலாளர் விடுத்த அவசர வேண்டுகோள்

United Nations Israel Dollars Palestine Gaza
By Amal Jul 01, 2026 06:02 PM GMT
Report

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமையான ‘உன்வா’ (UNRWA) கடுமையான நிதிப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், உலக நாடுகள் உடனடியாக 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கி அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும் என  ஐ. நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பெரும் நிதி நெருக்கடி காரணமாக இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

லெபனான், சிரியா மற்றும் காசா தொடர்பில் இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு

லெபனான், சிரியா மற்றும் காசா தொடர்பில் இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு

நிதிப் பற்றாக்குறை

இது தொடர்பாக நடைபெற்ற கொடையாளர்கள் மாநாட்டில் பேசிய குட்டேரஸ், காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 26 இலட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு இந்த முகமை கல்வி, மருத்துவம், உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

காசாவில் நிலவும் கொடூரமான சூழ்நிலைகள், லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேல் விதித்துள்ள கடுமையான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த அமைப்பின் சேவைகள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இஸ்ரேல் முன்வைத்த சில முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த அமைப்பிற்கு அதிக நிதி வழங்கி வந்த அமெரிக்கா தனது நிதியுதவியை நிறுத்தியுள்ளது.

ஐ. நா பொதுச்செயலாளர் விடுத்த அவசர வேண்டுகோள் | Un Agency Faces 100 Million Funding Shortfall

எனினும், ஐநாவின் விசாரணையில் பெரும்பாலான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், 2023 அக்டோபர் முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை இந்த ஐ. நா முகமைகளைச் சேர்ந்த 390 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட குட்டேரஸ், இந்த அமைப்பை முடக்க திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு பிரச்சாரங்களையும், அரசியல் ரீதியிலான தடைகளையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

துருக்கியின் ஐநா தூதுவர் அகமத் யில்டிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று சாடியுள்ளனர்.

கிளிநொச்சி - பிரமந்தனாறு விவசாய பண்ணைக்கு ஜப்பானிய தூதுவர் உத்தியோபூர்வ விஜயம்

கிளிநொச்சி - பிரமந்தனாறு விவசாய பண்ணைக்கு ஜப்பானிய தூதுவர் உத்தியோபூர்வ விஜயம்

ஈரான் அண்டை நாடுகளை அச்சுறுத்தக் கூடாது – அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் அண்டை நாடுகளை அச்சுறுத்தக் கூடாது – அமெரிக்கா எச்சரிக்கை

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US