ஈரானுக்கு அமெரிக்காவின் அதிரடி எச்சரிக்கை
ஈரான் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கவோ முயன்றால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க முயற்சித்தாலும், அதற்கு பதிலளிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பல்வேறு தெரிவுகள் உண்டு என துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதத் திட்டம்
ஈரான் தனது அணு திட்டத்தை மீண்டும் உருவாக்க முயன்றாலோ, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டாலோ, அல்லது தீவிரவாதத்திற்கு ஆதரவளித்தாலோ, அதைக் கையாளுவதற்கு ஜனாதிபதி ட்ரம்பிடம் தேவையான அனைத்து தெரிவுகளும் உள்ளதாக வான்ஸ் கூறியுள்ளார்.

எனினும், அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
தனது அணுசக்தி நடவடிக்கைகள் அனைத்தும் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக ஈரான் வலியுறுத்தி வருகிறது.
மேலும், "ஈரான் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால், அமெரிக்கா அதன் மீது குண்டுவீச்சு நடத்தியது.
ஹோர்மூஸ் நீரிணை
அதே நேரத்தில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அழுத்தம் செலுத்தினோம்" என வான்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவும் ஈரான் தரப்பும் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தப் பேச்சுவார்த்தைகளில், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச கடல் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் செயல்பாட்டு விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி வென்ஸ் தெரிவித்துள்ளார்.
You may Like this..