நியூசிலாந்தின் உலக ப்ரீமியர் தொடரிற்கான நடுவராக மூதூரை சேர்ந்தவர் தெரிவு
நியூசிலாந்தின் அவுக்லாந்த் கிரிக்கெட் சபையின் 2025இற்கான ஆடவர் மற்றும் மகளிர் உலக ப்ரீமியர் தொடருக்கான நடுவராக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மூதூர் சிஹான் சுஹூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தொடரானது 2024 டிசம்பர் முதல் 2025 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நியூசிலாந்தின் அவுக்லாந்த் மற்றும் வெலிங்க்டன் நகரங்களிலே நடைபெறவுள்ளது.
குறித்த தொடருக்கான இரண்டாம் மற்றும் நொக் அவுட் சுற்றுக்களுக்காவே நடுவர் சிஹான் சுஹூட் அவுக்லாந்த் கிரிக்கட் சபையினால் அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபை
குறித்த தொடரில் பல அனுபவம் வாய்ந்த சர்வதேச நடுவர்கள் பங்குபற்றுவதும் சிறப்பம்சமாகும்.

இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்து நியூசிலாந்தின் பிறீமியர் தொடரில் பங்குபெறும் முதல் இலங்கை நடுவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் 2022இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் கிரிக்கட்டின் முதல் தர போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கட் சபையிலிருந்து தெரிவான முதலாவது நடுவருமாவார்.
சிரேஸ்ட நடுவர்
மேலும், இவர் தற்போது இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் பிராந்திய முதல் தரம் மற்றும் பிறீமியர் தொடரின் நடுவராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மூதூர் மத்திய கல்லூரி, இ.கி.ச. திருகோணமலை இந்துக் கல்லூரி மற்றும் மாவனல்ல சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான சிஹான் சுஹூட் திருமலை கிரிக்கட் சங்கம் மற்றும் நடுவர்கள் சங்கத்தின் சிரேஸ்ட நடுவருமாவார்.
2016 தொடக்கம் தேசிய ரீதியாக இலங்கையில் பல மாவட்டங்களிலும் நடுவராக பணியாற்றிய சிஹான் சுஹூட், 2022 இல் இருந்து இன்று வரை கிரிக்கட்டின் முதல்தர நாடுகளில் பிராந்திய மற்றும் முதல்தர போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan