உமா ஓயா நீர் திட்டத்தின் ஜெனரேட்டர்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்
உமா ஓயா நீர் திட்டத்தின் இரண்டு ஜெனரேட்டர்களுக்கு இரண்டு பணிப்பெண்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன்படி, பொறியாளர்களுக்கு தேநீர் வழங்குவது உள்ளிட்ட மின்நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களான சுலோச்சனா மற்றும் தூதி ஆகியோரின் பெயர்கள் இரண்டு ஜெனரேட்டர்களிலும் பதியப்பட்டுள்ளன.
அரசியல் அழுத்தம்
உமா ஓயா மின் உற்பத்தி நிலையத்தை தேசிய அமைப்பில் இணைத்ததன் மூலம் நாளாந்த மின்சார உற்பத்தி செலவு ரூ. 800-1000 இலட்சம் வரை நாட்டுக்கு மிகுதியாகியுள்ளது.
2015ஆம் ஆண்டு திறக்கப்படவிருந்த இத்திட்டம் அரசியல் அழுத்தங்களால் 2024ஆம் ஆண்டு வரை தாமதமாகி நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் ரூ. 4500 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |