போருக்குப் பின்னரான இருண்ட காலத்தை பேசும் ஊழி திரைப்படம்
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 10 ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றிய ஈழத்து கவிஞர் தீபசெல்வன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(21.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு இதனை கூறியுள்ளார்.
ஊழி திரைப்படம்
மேலும் தெரிவிக்கையில்,
"ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ஆம் ஆண்டு கூறிய பின்னர் , கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம்.

இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றி பேசுகின்றது.
இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி இலங்கையில், யாழ்ப்பாணம், வவுனியா , மட்டக்களப்பு , திருகோணமலை உள்ளிட்ட பல திரையரங்குகளில் திரையிடவுள்ளோம்.
அதேவேளை 10ஆம் திகதியே கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற 11 நாடுகளில் 70 திரையரங்குகளில் திரையிடவுள்ளோம்” என கூறியுள்ளார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam