விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் 836 பேர் கைது
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 836 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 579 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடனும் 257 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ளடங்குபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருட்கள் மீட்பு
இந்நிலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட 6 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதுடன் ஒருவர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1650 போதை மாத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |