யுக்திய நடவடிக்கை குறித்து சாமிர பெரேரா வெளியிட்டுள்ள தகவல்
யுக்திய நடவடிக்கையின் ஊடாக சிறுபான்மை சமூகம் இலக்கு வைக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சாமிர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது தாக்குதல்
இது தொடர்பில் மேலும் கூறுகையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அடிமட்ட மக்களை இலக்கு வைத்து யுக்திய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதே தவிர போதைப்பொருள் வர்த்தகர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டு கட்சியின் குண்டர்களுடன் இணைந்து அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ரணில் ராஜபக்ச அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் அனுமதிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam