உக்ரைன் பதற்றம்! ரஸ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் முதலாவது பதில் நடவடிக்கை அறிவிப்பு!
உக்ரைனில் உள்ள ரஸ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ரஸ்யா - உக்ரைன் இடையிலான மோதல் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இருநாடுகள் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் ரஸ்ய ஜனாதிபதி யுக்ரைனின் இரண்டு பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ள நிலையில், எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதனையடுத்தே உக்ரைனில் உள்ள ரஸ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைவாக மதிப்பிடும் ரஸ்யாவின் முயற்சிகள் தொடர்பான சிலரின் சொத்துக்களைத் தடுத்தல் என்ற நிறைவேற்று கட்டளையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி ரஸ்யா அங்கீகரித்துள்ள உக்ரைனின் இரண்டு பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் நிதியுதவி மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.