40 வருடங்களுக்கு பின்னர் ரஷ்ய விமானங்களுக்காக தமது வான்வெளியை மூடும் அமெரிக்கா!
அமெரிக்கா தமது வான்வெளியில் ரஷ்ய விமானங்களுக்கு தடையை விதிக்கவுள்ளது.
பிபிசியின் அமெரிக்க பங்காளி சேவையான சிபிஎஸ் நியூஸ் இதனை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் ஏற்கனவே ரஷ்ய விமானங்களுக்கான தமது வான்வெளியை மூடியுள்ளன.
இந்தநிலையில் ரஷ்ய விமானங்களை தமது வான்வெளியில் பறக்கக்கூடாது என்று அமெரிக்காவின் உத்தரவு, இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கான சில விமானங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
40 வருடங்களுக்கு முன்னர் (1981) அமொரிக்கா ரஷ்ய விமானங்களுக்காக தமது வான்வெளியை மூடியது
போலந்தின் தொழிற்சங்கத்துக்கு எதிராக ரஸ்ய மேற்கொண்ட நடவடிக்கையை ஆட்சேபித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இரண்டு வருடங்களில் இந்த தடை நீக்கப்பட்டது.