என் மீதான நம்பிக்கையில் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர் - உதயங்க வீரதுங்க
உக்ரைன் விமான சேவை நிறுவனத்துடன் தனக்கு இருக்கும் நட்புறவு காரணமாக அந்த விமான சேவை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்ததாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் ஒருங்கிணைப்பாளர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
என் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக உக்ரைன் விமான சேவை நிறுவனம், எனது வார்த்தை மீது நம்பிக்கை வைத்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
இலங்கையில் சுமார் 20 லட்சம் பேர் சுற்றுலாத்துறையை நம்பி வாழ்கின்றனர். இந்த தொழிற்துறை மூடப்பட்டால், அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
என் மீது எப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் நாடு மற்றும் சுற்றுலாத்துறைக்காக இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பேன். எனது இந்த வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மாத்திரமல்ல பசில் ராஜபக்சவின் அனுமதியும் கிடைத்துள்ளது என உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்சவினரின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.