ட்ரம்பிற்கு அவசர அழைப்பு விடுத்த உக்ரேனிய ஜனாதிபதி
ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏதேனும் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு, டொனால்ட் ட்ரம்பை தனது நாட்டிற்கு வருகை தருமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "தயவுசெய்து, எந்த வகையான முடிவுகளுக்கும், எந்த வகையான பேச்சுவார்த்தைகளுக்கும் முன், மக்கள், பொதுமக்கள், வீரர்கள், மருத்துவமனைகள், தேவாலயங்கள், குழந்தைகள் அழிக்கப்பட்ட அல்லது இறந்தவர்களைக் காண வாருங்கள்" என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல்
ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சுமி நகரைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணைக்கு முன்னர் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்தனர். உக்ரேனிய வீரர்களின் கூட்டத்தில் இரண்டு இஸ்கந்தர் ஏவுகணைகளை வீசியதாகவும், அவர்களில் 60 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யா ஆதாரங்களை வழங்காமல் கூறியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
