ரஷ்யாவின் முக்கிய விமான நிலையங்கள் அதிரடியாக முடக்கம்.. 140 விமானங்கள் இரத்து
ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மொஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, குறைந்தது 140 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, சனிக்கிழமை காலை முதல் ரஷ்யாவின் மீது 230க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, அவற்றில் தலைநகரான மொஸ்கோவின் மீது 27 வீசப்பட்டுள்ளன.
கடுமையான தாக்குதல்கள்
ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, மொஸ்கோவுக்கு சேவை செய்யும் நான்கு முக்கிய விமான நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 130க்கும் மேற்பட்ட விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளன.
அதன் பின்னர் அனைத்தும் வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், உக்ரைனில் இரவு முழுவதும் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுடன் சமாதான உடன்பாட்டை நோக்கி நகரத் தயாராக இருப்பதாகவும், மொஸ்கோவின் முன்னுரிமை "எங்கள் இலக்குகளை அடைவது" என்றும் கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறிய நிலையில் உக்ரைனின் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
