உக்ரைன் மீது ரஷ்யாவின் திடீர் ஊடறுப்பு! தடுமாறும் உலக நாடுகள்(Video)
உக்ரைனில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு மக்கள் தொகையில் 43 மில்லியன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்த்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உக்ரைனில் நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாக வெளியேறும் அகதிகளில் 68 சதவீதமானோர் பெண்கள் ஆவர். இவ்வாறு வெளியேறிய பெண்களில் 2.5 மில்லியன் பேர் பெண் தொழிலாளர்கள் ஆவர்.
இந்த மக்கள்தொகை வெளியேற்றமானது உக்ரைனின் பொருளாதாரத்தின் சரிவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எனினும் 18 தொடக்கம் 60 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களை உக்ரைன் அரசு வெளியேற்றவில்லை.
இதற்கு காரணம் பலவந்த பயிற்சியின் மூலம் அவர்களை போருக்குள் உள்வாங்கும் நோக்குடன் செயற்பட்டுவதையே உக்ரைன் திட்டமாக கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான உக்ரைன் ரஷ்ய யுத்தத்தின் பின்னணியையும் உக்ரைனுக்குள் வல்லரசுகளின் நகர்வுகளையும் ஊடறுத்து வருகிறது இன்றைய ஊடறுப்பு.