உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது.
உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டெமைட்ரோ குலிபா சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.
அதன்படி துருக்கியின் அன்டாலாயா நகரில் இன்றைய தினம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லொவ்ரோவும் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவ்சொக்லுவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கி விஜயம் செய்துள்ளனர்.
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதல் தடவையாக உயர் மட்டத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புடினுடன் நேரடியாக பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் ரஷ்யா- உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரிகள் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மேவுலுட் கவ்சோக்லு இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் இடையே மத்தியம்சம் செய்வதில் துருக்கி முன் வந்தது. இருதரப்பினர் இடையே வலுவான உறவை பெறுவதில் அந்த நாடு ஆர்வமாக உள்ளது.
ரஷ்யா- உக்ரைன் மந்திரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி உடன் இருப்பார். முதல்முறையாக வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் இதில் உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வருமா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இரு நாடுகள் இடையே எழுந்துள்ள முக்கிய பிரச்சினைகளில் தீர்வு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
இதேவேளை, ரஷ்ய படையினர் உக்ரைன் வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.