தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா: வெளியேற்றப்படும் உக்ரைனியர்கள்
உக்ரைனின் குபியன்ஸ்க் அருகே வடகிழக்கு போர்முனையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலின் தீவிரம் காரணமாக உக்ரைன் அதிகாரிகள் பொதுமக்களை குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனின் குபியன்ஸ்க் மீதான தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு இராணுவ படைகளின் செய்தி தொடர்பாளர் செர்ஜி செரேவதி கூறுகையில்,
''ரஷ்ய தரப்புக்கள் தற்போது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதன் மூலம் குபியன்ஸ்க் நகரை அவர்கள் முழுமையாக கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்." என தெரிவித்துள்ளார்.
தீவிர தாக்குதல்
கடந்த செப்டம்பரில் உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தின் குபியன்ஸ்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உக்ரைன் படைகள் கைப்பற்றி இருந்தன.
எனினும் தற்போது ரஷ்ய தரப்புக்கள் குபியன்ஸ்க் நகரை கைப்பற்றுவதற்கான தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா நகரத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த தாக்குதல் தொடர்பான எந்த ஒரு உத்தியோகபூர்வ தகவலையும் உக்ரைன் தரப்பு வெளியிடவில்லை என குறித்த செய்தியில் மேலும் குறித்ப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |