புடினிடமிருந்து கிடைத்த செய்தியால் வெளியே வந்த உக்ரைன் ஜனாதிபதி(Video)
உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல மாட்டேன் என புடின் உறுதி வழங்கியவுடன் தனது பதுங்கு குழியிலிருந்து ஸெலென்ஸ்கி வெளியில் வந்ததாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல மாட்டேன் என உறுதிமொழி பெற்றதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்தார்.
அதற்கு புடின் 100 சதவீதம் நான் ஸெலென்ஸ்கியைக் கொல்ல மாட்டேன் எனகூறியதாக அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து புடினின் உறுதிமொழியை ஸெலென்ஸ்கி அறிந்துக்கொண்டு தனது பதுங்கு குழியிலிருந்து வெளியில் வந்து உக்ரைனின் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியில் நான் ஒருபோதும் ரஷ்யாவிற்கு அஞ்ச போவதில்லை என வீதியில் இருந்து கூட காணொளி வெளியிட்டிருந்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.” என கூறியுள்ளார்.