யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்: ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்
யுக்ரைனின் பிரபல பாதுகாப்பு அமைச்சரான மைக்கைலோ ஃபெடோரோவை ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி திடீரென பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து யுக்ரைனின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், *"ஃபெடோரோவ் மீது கை வைக்காதே, வெற்றியைத் தடுப்பதை நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தி ஜனாதிபதிக்கு எதிராக கோஷமிட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற 35 வயதான ஃபெடோரோவ், யுக்ரைன் ராணுவத்தில் இருந்த ஊழலை ஒழித்ததோடு, போர்க்களத்தில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ட்ரோன்களை (Drones) அறிமுகப்படுத்தி பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.
பதவி நீக்கம்
எனினும், அவருக்கும் யுக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த நீக்கத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய ஃபெடோரோவ், "இராணுவத் தளபதி சிர்ஸ்கி ரஷ்யாவை வீழ்த்துவதற்கான புதிய உத்திகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, நமது நாட்டைப் பிளவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

ஃபெடோரோவின் இந்த திடீர் நீக்கம் உக்ரைன் ராணுவ வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"யுக்ரைன் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதி நீக்கியுள்ளார். இது ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் செய்த மிகப்பெரிய தவறு" என்று களத்தில் இருக்கும் யுக்ரைன் இராணுவ வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யுக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய உள்துறை அமைச்சர் இஹோர் க்ளிமென்கோ நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.