உக்ரைன் - ரஸ்ய எல்லையில் உச்சக்கட்ட போர் பதற்றம்! - கனடா அரசின் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் - ரஸ்ய எல்லையில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
இதன்படி, ரஸ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு இராணுவ ஆயுதங்களை அனுப்புவதாகவும், 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஸ்ய எல்லையில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ரஸ்யா எல்லைப் பகுதியில் படைகளை குவித்ததுடன், உக்ரைன் மீது படையெடுக்கவும் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தின்.
எனினும், இதனை ரஸ்யா முற்றாக மறுத்திருந்தது. இந்நிலையில், ரஸ்யா தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
ரஸ்யாவின் இராணுவ செயல்பாடுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பிரித்தானிய பிரதமர் ஆகியோர் தொலைபேசி மூலம் 40 நிமிடங்கள் பேசியிருந்தனர்.
உக்ரைன்-ரஸ்யா விவகாரத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், எனினும் உரிய தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை என்றும் இருவரும் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதாக கனடா அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலின் தீவிரம் மற்றும் உக்ரைன் உடனான எங்களது நட்பு நாடுகளுடனான ஆலோசனைக்கு பின்னர், 7.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸய ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும் என்பதுததான் கனடா மற்றும் நடப்பு நாடுகள் அளிக்கும் இந்த ஆதரவின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.