நல்ல செய்தி இருக்கின்றது - நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து பல நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து எந்தெந்த இடங்கள் மீள கைப்பற்றப்பட்டது என்பதைக் குறிப்பிட மறுத்துள்ள உக்ரைன் ஜனாதிபதி, இப்போது பெயரிட நேரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
நல்ல செய்தி இருக்கின்றது
தனித்தனியாக, ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் மெதுவான அர்த்தமுள்ள முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டு மக்களுக்காக இரவு நேர காணொளியில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி, உக்ரேனிய துருப்புக்களின் வெற்றியைப் பற்றி நல்ல செய்தி இருப்பதாகக் கூறினார்.
ஒவ்வொரு குடிமகனும் எங்கள் வீரர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர் இராணுவப் பிரிவுகளுக்குப் பெயரிட்டு, போரில் அவர்களின் துணிச்சலைப் பாராட்டினார்.
எவ்வாறாயினும், உக்ரேனியக் கொடி மீளவும் ஏற்பட்ட பகுதிகளை பெயரிட இப்போது நேரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். உக்ரைன் சமீபத்திய வாரங்களில் அதன் செயல்பாட்டு பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளது.
டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதியை நோக்கித் தாக்குதல்
கிழக்கு மற்றும் தெற்கில் பரவலாக எதிர்பார்க்கப்படும் எதிர் தாக்குதல் பற்றிய சில விவரங்களை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. உக்ரேனிய வீரர்கள் கார்கிவ் நகரின் தென்கிழக்கில், டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதியை நோக்கித் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா அந்த பகுதிகளில் கணிசமான இராணுவக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
சில அறிக்கைகள் உக்ரேனியப் படைகள் ரஷ்யாவின் இராணுவ விநியோகச் சங்கிலியின் முக்கிய இணைப்பான Izyum நகரத்திலிருந்து சில டஜன் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கலாம் என்று கூறுகின்றன.