ஆப்பிரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை செய்தி! பாதுகாப்பு அறைகளை தேடி பதறியோடிய அதிகாரிகளால் பரபரப்பு
உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வெளிநாட்டு தலைவர்கள் வருகை தந்த நேரத்தில் ரஷ்யா கீவ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதல் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா கொடுக்கும் எச்சரிக்கை செய்தி என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி Cyril Ramaphosa, செனகல் ஜனாதிபதி Macky Sall உட்பட பல தலைவர்கள் அமைதி முறைப் பயணமாக நேற்று கீவ்வுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது திடீரென சைரன் ஒலி எழுப்பப்பட்டு கீவ் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், மேலும் ஏவுகணைகள் வீசப்படலாம் எனவும் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கத் தலைவர்கள் குண்டு பாதிக்காத அறைகளை நோக்கி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு இவை ரஷ்யா கொடுக்கும் எச்சரிக்கை செய்தி என்றும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |