தீவிரமடையும் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதல்: தொடரும் ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிறந்து 23 நாட்களேயான குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவிற்கு பதிலடியாக கெர்சனின் மேற்கு பகுதிகளை கடந்த நவம்பர் மாதம் மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில், டினிப்ரோ ஆற்றின் கரைக்கு அப்பால் இருந்து அப்பகுதிகளை ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கெர்சனின் ஷிரோகா பால்கா கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் இகோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பிறந்து 23 நாட்களேயான குழந்தை மற்றும் அவரது 12 வயது சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் என மொத்தம் 7 பேர் ரஷ்யாவின் இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
ஸ்டானிஸ்லாவ் அருகே உள்ள மற்றொரு கிராமத்திலும் ரஷ்யாவின் தாக்குதலால் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தீவிரவாதிகள் கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அவர்கள் படைகள் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கிளிமென்கோ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
