உக்ரைனுக்கு உதவ உலகவங்கி இணக்கம்
உக்ரைன் ரஷ்யா போரில், உக்ரைனில் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்க உதவுவதாக உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக உலக வங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் (Denys Shmyhal) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிதி ஜப்பான் உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மானியங்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு இந்த கடன் உதவியாக இருக்கும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரின் காரணமாக 2022 ஆம் ஆண்டு பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிய பிறகு, இந்த ஆண்டு பொருளாதார மீட்சியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மேலும் 'வேகமான' மீட்புக்கு நிதியுதவியைப் பெற வெளிநாடுகளுடன் இணைந்து செயற்படுவது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை போரின்போது பாதிப்படைந்த நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள், பாதைகள் மற்றும் பாலங்களில் புனரமைப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |