தோல்வியை மறைக்கும் ரஷ்யா! காணொளி ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன்
ரஷ்ய போர் கப்பலை உக்ரைன் கடல்வழி ட்ரோன்கள் தாக்கும் காணொளி காட்சிகள், உக்ரைனின் பாதுகாப்பு சேவைகளால் பகிரப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில்,‘‘உக்ரைனிய கடல்வழி ட்ரோன்கள் கருங்கடல் வழியாக நகர்ந்து ரஷ்யாவின் நோவோரோசிஸ்க்(Novorossiysk) துறைமுகத்திற்கு அருகே நின்று கொண்டு இருந்த ரஷ்ய கப்பல் மீது மோதியுள்ளது.
உக்ரைனிய ட்ரோன்களின் தாக்குதல்
Another video of ?? naval drone attacking a large russian warship in Novorossiysk. Moskva is waiting, comrades! #StandWithUkraine #RussiaIsLosing pic.twitter.com/h5JjbXiHQO
— olexander scherba?? (@olex_scherba) August 4, 2023
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தளத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இரண்டு உக்ரைனிய ட்ரோன்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ட்ரோன்கள் முழுவதும் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக்(Olenegorsky Gornyak) கப்பல் உக்ரைனின் கடல்வழி ட்ரோன்களால் தாக்கபட்டது என உக்ரைனிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
இவை உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை கடற்கரையில் தரையிறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
சேதம் மற்றும் உயிரிழப்புகள்
இந்த தாக்குதலின் போது 450 கிலோ TNT-களை உக்ரைன் ட்ரோன்கள் சுமந்து இருந்ததுடன் 100 ரஷ்ய பணியாளர் கப்பலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்ய கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் துறைமுக தகவல் அறிந்த ஆதாரம் வழங்கிய தகவலில், ரஷ்ய கடற்படை கப்பல் ஒன்று சேதமடைந்து கரைக்கு இழுத்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |