ஒரே நாளில் 83 இராணுவ பட்டாலியன்களை இழந்துள்ளதா ரஷ்யா!
வாக்னர் வாடகை இராணுவத்தினருடன் தொடர்புக்களை மேற்கொண்டு வந்ததாக கூறி ரஷ்ய இராணுவத்தின் உயரதிகாரிகள் சிலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் வாக்னர் வாடகை இராணுவதினரால் இடம்பெற்ற இராணுவ புரட்சியில் இவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறியே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் வாக்னர் படையின் இராணுவ புரட்சி நடவடிக்கை குறித்து ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அப்படியானால் வாக்னர் படைக்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையிலான தொடர்பை அந்நாட்டு புலனாய்வு பிரிவு அறிந்து வைத்திருக்கவில்லையா என்ற கேள்வி தற்போது உலக அரங்கில் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய புலனாய்வு பிரிவின் பலவீனங்கள் பற்றி கடந்த வருடம் ரஷ்ய ஆதரவாளர்கள் பல்வேறான முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
இவ்வாறு ரஷ்யாவின் இராணுவ புரட்சி தொடர்பிலான விடயங்கள் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் மாத்திரம் இல்லாது சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.
ஆனால் ரஷ்யாவினதும் புடினினதும் உக்ரைன் மீதான வெற்றி ஆரவாரங்களுக்கு மத்தியில் நாம் கவனத்தில் எடுக்க தவறிய விடயங்களை அலசி ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்.