புடினை எதிர்த்த வாக்னர் கூலிப்படையின் தலைவருக்கு ஏற்பட்டுள்ள நிலை! உலக செய்திகளின் தொகுப்பு
தன்னை எதிர்ப்பவர்களை எதிரிகள் போல பாவிக்கும் விளாடிமிர் புடினால் தாம் படுகொலை செய்யப்படலாம் என வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
இதனால் வாக்னர் கூலிப்படையின் தலைவர் தற்போது பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் ஜன்னல் இல்லாத அறையில் உயிருக்கு பயந்து பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய விளாடிமிர் புடினால் இதற்கு முன்னரும் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 62 வயதாகும் ப்ரிகோஜின் ஜன்னல் இல்லாத அறைக்குள் தஞ்சமடைந்துள்ளார் என அமெரிக்க உளவுத்துறை நிபுணர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆயுத கிளர்ச்சியை கைவிட ப்ரிகோஜின் ஒப்புக்கொண்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேற ரஷ்ய அரசாங்கம் அவருக்கு அனுமதி அளித்தது.
வாக்னர் கூலிப்படையினர் முன்னெடுத்த கிளர்ச்சியின் போது 15 ரஷ்ய விமானிகளை கொன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ப்ரிகோஜின் தற்போது துரோகி என விளாடிமிர் புடினால் ஒதுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,