ரஷ்யாவின் சொத்துக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி நடவடிக்கை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷ்யா மீதான 10 ஆவது பொருளாதார தடைகள் தொகுப்பிற்கு பிறகு, தடுத்து வைக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய புதிய எண்ணிக்கை வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா அதன் போரை தொடங்கியதிலிருந்து ரஷ்ய மத்திய வங்கியின் 200 பில்லியன் யூரோ(இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூபா.6.5 லட்சம் கோடி) சொத்துக்களை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் விகாண்ட் ரஷ்ய வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள அசையாத சொத்துக்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதி
உக்ரைனில் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷ்யா நஷ்டஈடு செலுத்துவதை உறுதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதி பூண்டுள்ளது.
அந்த நோக்கத்திற்காக ரஷ்யாவின் முடக்கப்பட்ட மற்றும் அசையாத சொத்துகளை பயன்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்ட அடுத்த கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், இதை பற்றி மேலும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |