உக்ரைனின் பதில் தாக்குதல் - பின்வாங்கும் ரஷ்ய படைகள்
உக்ரைன் கடந்த சில நாட்களுக்காக ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யப் படைகள் சில இடங்களில் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்று உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது மற்றும் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் நேட்டோ மாநாடு குறித்து ஆலோசனை நடத்துவது தொடர்பில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஜனாதிபதிகள் கலந்துரையாடியுள்ளார்.
புடின் உடன் பேச்சுவார்த்தை
இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறுகையில்,
''இந்த எதிர்தாக்குதல் பல மாதங்கள் இல்லாவிட்டாலும், பல வாரங்கள் நடைபெறலாம். எதிர்வரும் நாட்களில், வாரங்களில் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், இராணுவ வாகனங்கள் வழங்கப்படும். இந்த எதிர்தாக்குதல் வெற்றிகரமாக இருக்க வேண்டும். அதன்மூலம் புடின் உடன் பேச்சுவார்த்தை தொடங்க முடியும் என பிரான்ஸ் நம்புகிறது'' என தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த போலந்து ஜனாதிபதி டுடா, ''எங்களுடைய ஆதரவுடன் இந்த எதிர்தாக்குதலில் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்.'' எனத் கூறியுள்ளார்.
நீண்ட கால பாதுகாப்பு
உக்ரைன் தாக்குதல் தொடர்பில் ஜெர்மன் ஜனாதிபதி ஷோல்ஸ் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
''இந்த போரில் தனது திட்டம் தோல்வியடைந்து விட்டது, 16 மாதங்களாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புடின் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அவர் துருப்புகளை திரும்பப் பெற்று இறுதியாக நியாயமான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
எனினும், மூன்று தலைவர்களும் நீண்ட கால பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேச மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |