தீவிரமடையம் உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையிலான போர்! தமது நிலைப்பாட்டை அறிவித்தது இலங்கை அரசாங்கம்
உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையிலான போர் நேற்றையதினம் உக்கிரமடைந்ததை அடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் போர் ஆரம்பமாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் அறிவித்துள்ளார்.
ரஷ்ய - யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேநேரம், பெலாரஸில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையில் அதிகரிக்கும் மோதல்! முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்..

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
