உக்ரைன் - ரஷ்யா பேரின் மிகமுக்கிய ஒப்பந்தம் நடைமுறைக்கு
உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெயர் குறிப்பிட விரும்பாத உக்ரைன் அதிகாரி ஒருவரைமேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் முழுமையாக இந்த விடுதலை நடவடிக்கை இடம்பெறுவது தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றன என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், குறித்த அதிகாரி இந்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் ஆரம்பமானது.
தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தி இருநாட்டு எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது.
பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்தது. இதனால் சில இடங்களில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியது.
போர் தொடங்கி 3 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் சண்டை நிறுத்தப்படவில்லை.
ரஷ்யாவின் பரிந்துரை
இருநாட்டிற்கும் இடையில் சண்டையை நிறுத்த முயற்சிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா பரிந்துரை செய்தது.
அத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் ரஷ்யா பரிந்துரைகளில் பல்வேறு மாற்றங்களை செய்ய நிபந்தனை விதித்தது. இதற்கிடையே சண்டை தொடங்கிய பின்னர் முதன்முறையாக கடந்த வாரம் துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் நேருக்நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் முழுமையாக இந்த பேச்சுவார்த்தையில் தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
