ரஷ்யா அணுகுண்டை பயன்படுத்தும் சாத்தியம்: அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைனுடனான போரில் அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை (DIA) வெளியிட்டுள்ள புதிய உளவுத்துறை மதிப்பீட்டில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
DIA வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் போரில் ரஷ்யா அணுகுண்டுகளை பயன்படுத்தும் சாத்தியம் குறைவாகவே இருக்கின்றது.
ரஷ்யா தலைமையகம்
ஆனால், ரஷ்யா தலைமையகம் ‘அவர்களின் ஆட்சி அபாயத்தில் உள்ளது’ என நம்பினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.” என தெரிவித்துள்ளது.
“புதிய அணு கொள்கையில் பெரும் மாற்றங்கள் 2025 ஏப்ரலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த புதிய அணு கொள்கை மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இதில், சாதாரண (conventional) தாக்குதலுக்கே அணு ஆயுத பதிலடி கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதமுள்ள நாடு
மேலும், ஒரு சாதாரண தாக்குதலில் அணு ஆயுதமுள்ள நாடு உடந்தையாக இருந்தால், அதை அணுத் தாக்குதலாகவே ரஷ்யா கருதி பதிலடி செய்யும்.
ரஷ்யாவின் இறையாட்சி மற்றும் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஆபத்து ஏற்பட்டால், அணுகுண்டு பயன்படுத்தலாம்.
வான் வழி தாக்குதல், குரூஸ் ஏவுகணை, ட்ரோன், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் போன்ற பெருந்தொகையான ஒருங்கிணைந்த தாக்குதல் நடந்தால், அது அணுத் தாக்குதலுக்கு தகுந்த காரணமாக கருதப்படும்” என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
