இனி ரஷ்யா ஓடி ஒளிய கூடாது.. ஜெலென்ஸ்கியின் பகிரங்க அறிவிப்பு
போர்நிறுத்த தீர்மானங்களில் இருந்து இனி ரஷ்யா, மறைந்து விலகியிருக்க கூடாது என உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சபை செயலாளர் அடுத்த வாரம் ரஷ்யாவுடன் ஒரு புதிய சந்திப்பை முன்மொழிந்தார். அவர்கள் முடிவுகளிலிருந்து ஒளிந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.
போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், கொலைகளுக்கு முற்றுப்புள்ளி என்பன ஏற்பட வேண்டும். மேலும் நீடித்த அமைதியை உண்மையிலேயே உறுதி செய்ய தலைவர்கள் மட்டத்தில் ஒரு கூட்டம் தேவை. உக்ரைன் தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பேச்சுவார்த்தை
ஜெலென்ஸ்கியை பொறுத்தவரை, அடுத்த வாரம் ரஷ்ய தரப்புடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்ததாக உமெரோவ் தெரிவித்தார்.
Secretary of the NSDC proposed a new meeting with Russia next week. They must stop hiding from decisions. Ceasefire. Prisoner exchanges. Return of children. End to the killings. And a meeting at the level of leaders is needed to truly ensure a lasting peace. Ukraine is ready. pic.twitter.com/ksH7FzxnAE
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) July 19, 2025
பேச்சுவார்த்தைகளின் வேகத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், போர்நிறுத்தத்தை அடைய முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மிகச் சமீபத்திய கைதிகள் பரிமாற்றம் கடந்த ஜூலை 4ஆம் திகதி அன்று நடந்தது. சம்பந்தப்பட்ட பெரும்பாலான உக்ரேனிய பாதுகாவலர்கள் 2022 முதல் ரஷ்யாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெலென்ஸ்கி வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் அடுத்த வாரம் அளவில் உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
