துல்லியமாக ரஷ்யாவுக்குள் நுழைந்த ட்ரோன்கள்! உக்ரைனுக்கு பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் இராணுவம், ரஷ்யா மீது நேற்று இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், மின் நிலைய வசதிகள் மற்றும் ஒரு மின்னணு ஆலையைத் தாக்கியமை தொடர்பில் உக்ரைன் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ டெலிகிராம் பதிவிலேயே இதனை கூறியுள்ளது.
மொஸ்கோவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 12 பிராந்தியங்கள் மற்றும் கிரிமியன் தீபகற்பத்தில் 121 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா முன்பு கூறியிருந்தது.
ரஷ்ய அரசு ஊடகங்கள்
எனினும், உக்ரைனிய ட்ரோன்கள் மொஸ்கோவின் தெற்கே ரியாசான் பகுதியில் உள்ள "ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றை" தாக்கியதாகவும், அதே பிராந்தியத்தில் உள்ள ஒரு வெப்ப மின் நிலையத்தின் வசதிகளை தாக்கியதாகவும் உக்ரைனிய பொது ஊழியர்கள் தெரிவித்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சேதமடைந்த மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆலை உக்ரைனின் எல்லையில் உள்ள மேற்கு பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ட்ரோன்கள் தொழிற்சாலையில் உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து பிரையன்ஸ்கில் உள்ள ஆலை செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
இதன்படி ரியாசான் பிராந்தியத்தின் ஆளுநர் பாவெல் மல்கோவ், ஒரு "நிறுவனத்தில்" தீ விபத்து ஏற்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும்,தாக்குதலில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும், "ரஷ்ய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எரிபொருள், மசகு எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்களை வழங்கும் வசதிகளை முறையாகவும் குறிவைத்தும் அழிப்பது உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு முற்றிலுமாக நிறுத்தப்படும் வரை தொடரும்" என்று உக்ரைன் இராணுவம் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
ரஷ்யாவின் பதில்
ரஷ்ய தலைநகரைச் சுற்றியுள்ள நான்கு இடங்களில் உக்ரேனிய ட்ரோன்களின் தாக்குதல்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.
மொஸ்கோவுக்கு, தென்கிழக்கே உள்ள கொலோம்னா மற்றும் ராமென்ஸ்காயில் உள்ள வான் பாதுகாப்புப் படைகள் "எதிரி" ட்ரோன்களை எத்தனை என்பதைக் குறிப்பிடாமல் முறியடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
போரில் வடகொரியா வீரர்கள் அதிக இழப்புகளைச் சந்தித்த போதிலும், அதன் சில வீரர்கள் பிடிபட்டதைக் கண்ட போதிலும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போராட்டத்தில் சேர வட கொரியா கூடுதல் துருப்புக்களை அனுப்பத் தயாராகி வருவதாக தென் கொரியாவின் இராணுவம் கூறிய நிலையில் இந்தத் தாக்குதல் நடந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அற்றம்அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிகளை கையாள முயற்சிக்கும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நகர்வுகளை எச்சரிப்பதாகவும், செர்ஜி சோபியா தெரிவித்துள்ளார்.
புடினின் நிலைப்பாடு
இந்நிலையில், 2020ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்று விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர, சர்வதேச அளவில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் அமெரிக்காவில் வலுவான ஜனாதிபதி பதவியில் இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்றும் புடின் கூறியுள்ளார்.
ட்ரம்ப் ஒரு புத்திசாலி என்று பாராட்டி உள்ள அவர், நடைமுறை யதார்த்தங்களை அறிந்தவர் என்றும் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது ட்ரம்ப் பொருளாதார தடை விதிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ஏனென்றால், அது அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் புடின் கூறியுள்ளார்.
இருவரும் சந்தித்து பேசினால் முக்கிய பிரச்சினைகளில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |