ஜேர்மனி வழங்கிய கவச வாகனங்களை ஏற்க மறுத்த உக்ரைன்
உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கிய சில கவச வாகனங்களை உக்ரைன் ஏற்க மறுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு, ஜேர்மனியும், டென்மார்க்கும் கவச வாகனங்களை வழங்கியுள்ளன.
ஆனால், அவற்றில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்துள்ளது. அதற்குக் காரணம், Leopard 1 tanks என்னும் அந்த கவச வாகனங்களில் சிலவற்றில், பல குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உக்ரைனுக்கு வழங்கப்பட்ட கவச வாகனங்களை உக்ரைன் வீரர்கள் ஆராய்ந்தபோது, வழங்கப்பட்ட 20 கவச வாகனங்களில் 18இல் சில சிறிய பிரச்சினைகள் இருந்துள்ளன.
மேலும் இரண்டு கவச வாகனங்களில் மிகப்பெரிய பிரச்சினைகள் இருந்துள்ளன. குறிப்பாக சில கவச வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கிகள் செயற்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இதுவே உக்ரைன் மறுப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |