செர்னோபில் அணுமின் நிலையத்துடனான அனைத்து தொடர்புகளையும் உக்ரைன் இழந்தது!
செர்னோபில் அணுமின் நிலையத்தின் உடனான அனைத்து தகவல் தொடர்புகளையும் உக்ரைன் இழந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள IAEA இதனை குறிப்பிட்டுள்ளது. 1986ம் ஆண்டு மிகப்பெரிய அணு விபத்து நடந்த இடமான செர்னோபில் அணுமின் நிலைய ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து அங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ரஷ்யா கைப்பற்றி வருகின்றது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய படையினர் கைப்பற்றினர்.
இந்நிலையில், செர்னோபில் அணுமின் நிலையத்துடனான (NPP) அனைத்து தகவல்தொடர்புகளையும் இன்று இழந்துவிட்டதாக உக்ரைன் சர்வதேச அணுசக்தி முகமையிடம் தெரிவித்துள்ளதாக IAEA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மின்னஞ்சல் மூலம் தொடர்பு இருந்ததாகவும் தற்போது அனைத்து தொடர்புகளும் முற்றாக இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




