ரஷ்யாவை குறிவைத்து திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்பு சதி முறியடிப்பு
ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளை குறிவைத்து உக்ரைனுடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டிருந்த குண்டுவெடிப்பு சதியை முறியடித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தனது முதுகில் சுமந்து செல்லும் பையில் (Backpack) வெடிகுண்டுடன் நடமாடிய ஜெர்மனி நாட்டுப்பெண் ஒருவர் தெற்கு நகரமான பியாடிகோர்ஸ்க்கில் (Pyatigorsk) வைத்து திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிடப்பட்டிருந்த சதி
உக்ரைனின் உத்தரவின் பேரில் மத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவரால் இப்பெண் இப்பணிக்கு அமர்த்தப்பட்டதாக ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி (FSB) பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த மத்திய ஆசிய நபரும் இலக்கு வைக்கப்பட்ட இடத்திற்கு அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெடிகுண்டு சாதனமானது 1.5 கிலோ டிஎன்டி (TNT) வெடிபொருளுக்குச் சமமான வலிமை கொண்டது என்றும், இது தொலைதூக்கிக் கருவி (Remote) மூலம் இயக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு நெரிசல் (Electronic jamming) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வெடிப்புத் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தரப்பு மறுப்பு
நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்ய-உக்ரைன் போரின் போது, உக்ரைனுக்காகச் சதி வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஏற்கனவே பலரை ரஷ்யா கைது செய்துள்ளது.
எனினும், இத்தகைய தாக்குதல் முயற்சிகளில் உக்ரைனின் நேரடித் தொடர்பு குறித்துப் போதிய ஆதாரங்களை ரஷ்யா வழங்கவில்லை என உக்ரைன் தரப்பு இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam