ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் தாக்குதல்! ட்ரோன்களை சுட்டுவீழ்த்தி அதிரடி காட்டும் ரஷ்யா
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் அதிரடியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கட்டிடமொன்று சேதமடைந்துள்ளதாகவும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Moscow. Arrival. pic.twitter.com/TUzksGJ1T7
— Ukraine Front Lines (@EuromaidanPR) May 30, 2023
மாஸ்கோ கவர்னர் ஆண்ட்ரி வோரோபியோவ் வழங்கிய தகவலில், மாஸ்கோ மீதான தாக்குதலில் களமிறக்கப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யா மீதான ட்ரோன் தாக்குதலை உக்ரைன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், “நாங்கள் ரஷ்ய ஜனாதிபதி புடினையோ அல்லது மாஸ்கோவையோ தாக்கவில்லை” என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
#WATCH | Russia today alleged that there were attempts by Ukraine to assassinate President Putin, saying it was a "terrorist attack" while claiming it shot down drones over the residence of Putin
— ANI (@ANI) May 3, 2023
(Video: Russia's RT news) pic.twitter.com/6b7jkeYluT