குறிபார்த்து குண்டு மழை பொழிந்த ரஷ்யா! பின்னணியில் சிக்கிய உக்ரைன் பெண் பிரபலம்
உக்ரைன் சமூக ஊடக பிரபலம் ஒருவர் முக்கியமான இராணுவ வைத்தியசாலையொன்றின் இட அமைவை வெளியிட்ட சில மணி நேரத்தில் ரஷ்யா குண்டு மழை பொழிந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 600,000 பின் தொடர்பாளர்களை கொண்ட பெண் பிரபலம் Dnipro பகுதியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையை குறிப்பிட்டு, உடனடி உதவி தேவைப்படுவதாகவும், போரினால் காயம்பட்ட உக்ரைன் வீரர்களால் நிரம்பியுள்ளதாகவும் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த கோரிக்கையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Anna Alkhim நேரலையில் பதிவு செய் பின்னர் அடுத்த சில மணி நேரத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இச்சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 30 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர் எனவும், அந்த மருத்துவமனை சின்னாபின்னமாகியுள்ளது.
ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு காரணம் அந்த இன்ஸ்டாகிராம் பதிவு தான் என்பதையும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உக்ரைன் தற்போது இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தரவுகளை பகிரும்போது அவதானம் தேவை எனவும் எச்சரித்திருந்தனர். மருத்துவமனை மீதான தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |