உக்ரைனில் வாக்னர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியர்கள்! தொடரும் சிக்கல்
உக்ரைன் போர் சூழலில் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு களமிறங்கிய பிரித்தானிய ஊழியர்கள் இருவர் ரஷ்யா அல்லது வாக்னர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியர்கள் இருவரும் பக்மூத் பிராந்தியத்தில் பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இருவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இருவரின் ஆவணங்களையும் வாக்னர் கூலிப்படையினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட தகவல்
பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மனிதாபிமான உதவிகள் மேற்கொண்டுவந்த இரு பிரித்தானியர்களும் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பிரித்தானியர்கள் இருவரும் சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையினரால் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரித்தானியர்கள் இருவரும் கொல்லப்பட்ட விவகாரம் போர் குற்ற நடவடிக்கை என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பம் தெரிவித்துள்ளது
மேலும், போர் குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு, 1.3 மில்லியன் பவுண்டுகள் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.