ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து பிரித்தானியாவின் அதிரடி தீர்மானம்
உலக சந்தையிலிருந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையை மொத்தமாக நீக்க உக்ரைனுக்கான கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் ஸ்டார்மர் உறுதி அளித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், லண்டனில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உட்பட கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் சந்தித்து, அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் முடிவெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புடினுக்கு தொடர் அழுத்தம்
இந்த கூட்டத்திலேயே, உக்ரைனின் எதிர்காலம் எங்களது எதிர்காலம் என ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார். புடினுக்கு அழுத்தம் கொடுத்து, இறுதியாக அவரை நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவர தற்போதே செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கான கூட்டணியானது இராணுவ ரீதியான அழுத்தத்தையும் புடினுக்கு அளிக்கும் என்றும், உக்ரைனில் அமைதி திரும்பும்போது பன்னாட்டு பாதுகாப்பில் பணி தொடரும் என்றும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் வான்பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குளிர்காலத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த உக்ரைனுக்கு கூடுதல் ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கும் என்றும் ஸ்டார்மர் உறுதி அளித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து நிதியை விடுவிப்பதில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக கூறிய ஸ்டார்மர், இது தொடர்பில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri