உக்ரைன் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைனில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை நீக்க அதிகப்பட்சமாக 757 ஆண்டுகள் ஆகும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்காக சுமார் 500 கண்ணிவெடிகளை அகற்றும் குழுக்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இந்த மிக நீண்ட கால அளவினை அறிவித்துள்ளனர்.
அத்துடன் அடுத்த பத்தாண்டுகளுக்கு உக்ரைன் மண்ணில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற சுமார் $37.4 டொலர் தொகை செலவு ஆகும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
குண்டுகள் மற்றும் செல்கள்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடங்கிய நாள் முதல் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படை வீரர்கள் கண்ணி வெடிகளை புதைத்து பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த கண்ணி வெடிகளால் இதுவரை ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்ய வீரர்களின் முன்னேற்றங்களை தடுக்கும் வகையில் உக்ரைன் ஆயுதப்படை வீரர்களும் கண்ணிவெடிகளை ஆங்காங்கே புதைத்து வைத்துள்ளனர்.
It will take 757 years to completely demine the entire territory of #Ukraine from different types of bombs and shells
— NEXTA (@nexta_tv) July 22, 2023
Such a long period of time was given by analysts of The Washington Post, provided that it is carried out by 500 demining teams.
In addition, the World Bank… pic.twitter.com/zhAUdLsHEc
இந்நிலையில் உக்ரைனின் அனைத்து பகுதிகளிலும் புதைக்கப்பட்ட பல வகை குண்டுகள் மற்றும் செல்களை முழுவதுமாக அகற்ற சுமார் 757 ஆண்டுகள் எடுக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |