ரஷ்ய தலைநகர் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: பதிலடிக்கு தயாராகும் புடின்
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரைன் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்தாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் இன்றைய தினம் (30.07.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்ய - உக்ரைன் போர் ஆரம்பமானது. இந்தப் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அடிக்கடி டிரோன்கள் மூலம் ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து
இந்த நிலையில், இன்றைய தினம் அதிகாலை ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில், உக்ரைன் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்தாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மொஸ்கோவில் உள்ள நுகோவோ என்ற சர்வதேச விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த விமான நிலையத்துக்கு வருவதாக இருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்ய பாதுகாப்பு படை
ரஷ்யாவின் தலைநகரிலேயே உக்ரைன் சர்வ சாதாரணமாக தாக்குதல் நடதியிருப்பது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக ஜனாதிபதி புடினின் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளார்கள்.
இதற்கு தகுந்த பதிலடியை ரஷ்யா கொடுக்கும என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ட்ரோன்களை இடை நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை ரஷ்ய இராணுவம் பலப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய உக்ரைனுக்கு மொஸ்கோ நகர மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மொஸ்கோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |