ரஷ்யாவின் நட்சத்திரமாக போற்றப்பட்ட ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! காணொளி வெளியானது
ரஷ்யாவின் நட்சத்திரமாக போற்றப்பட்ட Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனின் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இது தொடர்பான காணொளியை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தில் வெளியிட்டுள்ளதுடன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனின் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
The Arctic TOR-M2DT air defense system became the star of russian television when it was sent to Ukraine. But soon a Ukrainian drone introduced it to Ukrainian gunners.
— Defense of Ukraine (@DefenceU) February 2, 2023
It burned brightly, the fire extinguisher did not help. pic.twitter.com/12ze4kj6sl
உக்ரைனில் இராணுவ ட்ரோன்கள் மூலம் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சிகளில், ரஷ்யாவின் Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை முதலில் உக்ரைனிய படைகள் தாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து தீயை ரஷ்ய வீரர்கள் அணைக்க முயற்சிக்கும் போது ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் அருகில் உக்ரைனிய வீரர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர்.அதில் பல ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட கருத்து
ரஷ்யாவின் இந்த Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு போரில் உக்ரைனுக்கு முதன்முதலில் அனுப்பப்பட்ட போது, ரஷ்ய தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்பட்டது. ஆனால் உக்ரைனிய ட்ரோன்கள் அவர்களுக்கு எங்களது துப்பாக்கிதாரிகளை அறிமுகப்படுத்தி அதை பிரகாசமாக ஒளிரச் செய்துள்ளனர்.அத்துடன் தீயணைப்பான்கள் இதில் உதவி செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைனில் தகர்க்கப்பட்டது தொடர்பான முதல் ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கை இதுவாகும். இது முக்கியமாக ஆர்டிக் சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.