உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாக கொண்டு தாய்வானை தாக்க சீனா திட்டம்? - செய்திகளின் தொகுப்பு
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது தாய்வான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது உலக நாட்டு அதிபர்களின் கவனம் உக்ரைன் மீது உள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சீன ஜி ஜின் பிங் அரசு தாய்வான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ எச்சரித்துள்ளார்.
இது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒருவேளை ரஷ்யா உக்ரைனை இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கைப்பற்றிவிட்டால் அடுத்து சீனா தாய்வான் மீது ரஷ்யா போல ஏவுகணைத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகக் கருத்து முன்வைக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,