அமெரிக்காவின் ஒப்புதலுடன் ரஷ்யா மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்ட உக்ரைன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கிய பின்னர் ரஷ்யாவின் மீது உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நேட்டோ அமைப்பின் மறைமுகமான தாக்குதலாக கருதப்படுவதால் ரஷ்யா இதற்கு விரைவில் பதிலடி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஷ்யாவின் கொள்கை மாற்றம்
இதேவேளை, உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்ற கொள்கை மாற்றத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் ஜி20 மாநாட்டில் வைத்து அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவர் குறித்த அனுமதியை வழங்கிய 24 மணி நேரங்களுக்குள் உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |